“ஒவ்வொருவர் வீட்டிலும் ‘சக்திஒளி’ இருக்க வேண்டும் , எந்தெந்த வீட்டில் சக்திஒளி இருக்கிறதோ அங்கு நான் இருக்கிறேன் மகனே! “
“ ‘சக்திஒளி’ வெளியிடும் பொறுப்பையும் பெண்கள் ஏற்றுச் செய்ய வேண்டும்.ஓவ்வொரு வீட்டிற்கும் காலண்டர் இருப்பது போல ‘சக்திஒளி’ இருக்க வேண்டும் “
“யார் யார் வீட்டில் ‘சக்திஒளி’ ‘சக்தி மாலை’ இதழ்கள் இருக்கின்றதோ அவர்கள் நலமுடன் வாழ்வார்கள்.”
“நம் பக்தர்கள் மற்றும் தொண்டர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு ‘சக்திஒளி’ எப்போதும் இருக்க வேண்டும் . நல்ல எண்ணத்தோடு செய்யும் ஒவ்வொரு நல்ல காரியமும் வெற்றியாக முடியும் . அதை அனுபவத்தில் உணரலாம் .”
‘உலகில் இன்று காணப்படும் துயரங்கள் அனைத்தும் நீங்கி , மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் ‘ என்றே – அன்னை ஆதிபராசக்தி – இம்மருவத்தூர் மண்ணில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி வருகிறாள். மக்களிடம் பக்தியும் நல்ல எண்ணமும் , ஆன்மிக ஈடுபாடும் கட்டாயம் வேண்டியவையாகும்.இவைகளை கருவாகக்கொண்டே ‘சக்தி ஒளி’ திங்கள் இதழ் வெளிவருகிறது.
‘இன்றைய அறிவியல் உலகில், ‘நல்லது இது – கெட்டது இது’ என மக்கள் யாரும் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை!. இம்மயக்கம் தீர்ந்து-அனைவரும் மெய்ஞானக் கண் கொண்டு அஞ்ஞானம் அகற்றி வாழ-அன்னையின் திருவருளால் அவள் அருளாணை தாங்கி வரும் ஏடு இது!.
‘பக்தர்கள் அனைவரும் இவ்விதழ் மூலம் சக்தியின் தண்ணருள் அனைத்தும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்களாக!.
ஆன்மிக ஒளி பரப்பும் அறிவுச்சுடரான ‘சக்திஒளி’ மாத இதழ் நமது சித்தர் பீடத்தில் 1982 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.
பல ஆன்மிகவாதிகளும் , தமிழ் சான்றோர்களும் , இலக்கிய மேதைகளும் , உயர் கல்வியாளர்களும் , மருத்துவ வல்லுனர்களும் , பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்களும் ஆரம்ப நாட்களில் அன்னை ஆதிபராசக்தியின் அவதாரமாக விளங்கும் நமது “அம்மா” அருள்திரு பங்காரு அடிகளாரைப் பற்றி தெளிவான பல கட்டுரைகளை வெளி உலகிற்கு ‘சக்திஒளி’ இதழ் மூலம்தான் எடுத்துரைத்தனர்.
நமது சித்தர் பீடத்தின் மகிமைகள் , அற்புத நிகழ்வுகள் , பக்தர்களின் உண்மை அனுபவங்கள் , அன்னையின் அரிய பல சித்தாடல்கள் ஆகியவை அனைத்தும் ‘சக்திஒளி’ இதழ் மூலமாகத்தான் உலக மக்கள் அறியப் பெற்றனர்.
ஒவ்வொரு காலகட்டத்திற்கும் தகுந்தாற்போல் ‘சக்திஒளி’ மாத இதழ் அம்மாவின் அருளால் புதுப் பொலிவுடன் உருவாக்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது ‘சக்திஒளி’ இதழில் , அன்னையின் முத்தான அருள்வாக்குகள் , பொருட்செறிவுள்ள பல கட்டுரைகள்,சித்தர் பீடத்தைப் பற்றிய பல்துறை வல்லுனர்களின் கண்ணோட்டங்கள் , வாழ்க்கை அனுபவங்கள் ,இளம் சிறார்களுக்கான அம்மாவின் வரலாற்றுப் படக்கதைகள் , சித்தர்பீடத்தின் விழாக்களைப் பற்றிய கட்டுரைகள் , மற்றும் ஆதிபராசக்தி கல்வி நிறுவனச் செய்திகள் ஆகியவை நல் விருந்தாக வாசகர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
‘யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்பதற்கிணங்க ‘சக்திஒளி’ இதழின் பெருமையையும் , அதனைப் பெறுவதன் மூலம் அன்னையின் அருளுக்குப் பாத்திரமாகும் அருளையும் மக்களுக்கு எடுத்துரைத்து அனைவர் இல்லங்களிலும் அன்னை ஆதிபராசக்தி ‘சக்திஒளி’ வடிவில் உலா வரத் தொண்டாற்றி அன்னையின் அருளுக்குப் பாத்திரமாவோமாக!.
Every part of this theme can be translated to another language. Even this content you are reading now!
The drop-down in the main menu is called a Locale Picker. It lets you quickly switch between any of the available languages when browsing this website.
For help on setting up more languages, close this popup and click the Languages menu item.